How To Remove Anything from Online Without Use Photoshop in Tamil | Online Best Photo Remove Object 

How To Remove Anything from Online Without Use Photoshop in Tamil | Online Best Photo Remove Object
Cleanup Pictures

வணக்கம் மக்களே 
இன்று உங்களுக்கு ஒரு சூப்பரான Website பற்றி சொல்லி தரவுள்ளேன். இதில் நீங்கள் எந்த வித மென்பொருளும் உங்கள் கணனியில் Install செய்யாமல் ஒரு புகைப்படத்தில் இருக்கும் சில விடயங்களை இலகுவாக மறைத்து அது இருந்த இடமே தெரியாமல் போக செய்யமுடியும்.

இதில் நீங்கள் வேலைசெய்ய உங்களுக்கு ஒரு கணனியோ அல்லது மொபைலோ இருக்கவேண்டும் அத்துடன் இன்டர்நெட் வசதியும் வேண்டும் . இவைமட்டுமே வேண்டும். 

கணனியில் இன்ஸ்டால் செய்யும் Software க்கும் இப்படி Online மூலம் செய்யும் Software க்கும் என்ன வித்தியாசம்?

 
கணனியில் இன்ஸ்டால் செய்யும் மென்பொருட்கள் பெரும்பாலும் மிக Load ஆனா Software ஆகத்தான் இருக்கும். அனால் இந்த Website மிக இலகுவானது.

கணனியில் இன்ஸ்டால் செய்யும் மென்பொருட்கள் மூலம் பல Extra வேலைகளும் செய்துகொள்ளலாம் ஆனால் ஒரு குறிப்பிட்ட வேலைக்காக அந்த ஓபன் செய்யணும். இதில் உங்களால் குறிப்பிட்ட ஒரு வேலை மட்டும் தான் செய்யமுடியும் என்பதால் உங்களுக்கு இந்த வேலை வேண்டும் என்றால் இலகுவாக ஓபன் செய்து உங்கள் வேலையை முடிக்க முடியும் இதற்காக முழு Software உம் load ஆகி ஓபன் பண்ணனும் என்று இல்லை.

விலை கொடுத்து நல்ல ஒரு கணனி வாங்கனும் என்று கிடையாது. உங்களிடம் இருக்கும் ஒரு சாதாரண கணனியே போதுமானது இந்த தளத்தில் சென்று உங்கள் வேலைகளை முடிப்பதற்கு

இந்த தளத்தில் நீங்கள் Work பண்ணிய பிரதியை HD ஆகவும் பெற்றுக்கொள்ளமுடியும். அதற்கு நீங்கள் உங்கள் ஈமெயில் கொடுத்து அந்த தளத்தில் Login செய்தல் வேண்டும். இல்லை உங்களுக்கு 720p  போதும் என்றால் நீங்கள் அந்த தளத்தில் login செய்யாமல் இந்த தளத்தை பயன்படுத்தவும் முடியும்.

என்னதான் இலகுவாக்க பயன்படுத்த கூடியதுபோல் இந்த மென்பொருள் இருந்தாலும் இந்த தளத்துக்கு போக உங்களுக்கு கட்டாயம் இன்டர்நெட் வசதி வேண்டும். 

மேலே இந்த தளத்தில் உள்ள நல்லது, கேட்டது என்பன என்னவென்று பார்த்தோம். இனி இதில் எவ்வாறு வேலை செய்வது இது யார் யார்க்கு மிகவும் பயன் தரும் என்று பார்ப்போம். அதற்கு முதல் இதில் வேலைசெய்யும் முறையை எனது SV Tamil Tech YouTube Channel இல் பதிவு செய்துள்ளேன் அதற்கான காணொளி லிங்க் கீழே தந்தும் உள்ளேன். இவை போல் பலதரப்பட்ட தகவல்களை அறிந்துகொள்ள என்னை Follow பண்ணவும்.
👇👇👇
இந்த தளத்தில் வேலை செய்வது மிகவும் எளிது. இந்த தொகுப்பின் கீழே உள்ள லிங்க் இனை கிளிக் செய்வதன் இந்த தளத்துக்கு நேரடியாக நீங்கள் செல்லமுடியும்.

யார் யார்க்கும் இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றால் Freelancer மூலம் work செய்யும் அனைவருக்கும் இந்த தளம் மிகவும் முக்கியம். குறிப்பிட்ட நேரத்திற்குள் நிறைய Work வந்திடும், அந்த நேரத்தில் Time தான் எல்லாம். அதனால் அவர்களுக்கு இந்த தளம் அவர்கள் வேலையை இலகுவாகவும் குறிப்பிட்ட நேரத்திலும் செய்து முடிக்கமுடியும்.

இதில் வேலை செய்வதும் மிகவும் எளிதாகவே உள்ளது.  இந்த தளத்துக்கு சென்றவுடனேயே உங்களுக்கு Image Add பண்ணச்சொல்லும், நீங்களும் Image add செய்தபிறகு ஒரு Pen போன்று ஒன்றுவரும். அதை பாவித்து உங்களுக்கு அந்த Image இல் தேவையில்லாத இடங்களை கீறுவதன் மூலம் அந்த இடத்தில் இருந்த பொருளை நீக்கமுடியும்.

இந்த Cleanup Pictures தளத்துக்கு செல்வதற்கான லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. லிங்க் பெற்றுக்கொள்ள 35 வினாடிகள் காத்திருக்கவும். பின்னர் வரும் Click Here என்றதை கிளிக் செய்யவும்.
👇👇👇
You have to wait 35 seconds.

Download Timer