இலங்கையில் அதிலும் 
யாழ்ப்பாணத்தில் இப்படி ஒரு இடமா 
Such a Beautiful Place in Jaffna in Sri Lanka

neithal-beach-city-in-jaffna
neithal-beach-city-in-jaffna

வணக்கம் இது உங்கள் SV Tamil Tech

இலங்கையில் உள்ள அழகான இடங்களை தேடி ஓர் பயணம். இந்த தொகுப்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு இடம் பற்றி சொல்ல இருக்கிறோம். இங்கு ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை துப்பாக்கி சுட்டு பழகலாம், மற்றும் அம்பினை குறி தப்பாமல் எய்து பழகலாம். துடுப்பு வலித்து படகு செலுத்த விருப்பம் உள்ளவர்களுக்கும் இந்த இடம் ஒரு சிறந்த இடம் ஆகும். அனைத்து படங்களும் இந்த பதிவில் உள்ளது மற்றும் இதன் வீடியோ தொகுப்பு பார்க்க விருப்பம் என்றால் என்னோட YouTube Channel ஓட வீடியோ Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

எமது பயணம் பருத்தித்துறையில் இருந்து ஒரு 35KM பயணமாக இருந்தது. இந்த இடம் நாவற்குழி-காரைதீவு-மன்னார் ஹைவேயில் இருந்து 1.4km ஓரளவான சிறிய பாதையில் கடற்கரை நோக்கி உள்ளே செல்ல வேண்டும். இது சாவகச்சேரி தாண்டி சிறிது தூரம் செல்ல வரும். இதற்கு Neithal Beach City என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. இதன் கட்டுமானம் இன்னும் முடியவில்லை. ஆனாலும் பல சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர். 


முகப்பு 

beautiful-place-in-jaffna-in-srilanka
beautiful-place-in-jaffna-in-srilanka

பெரிய இரண்டு தூண்கள் போல் அமைத்து அதற்கு மேல் ஓலை கூரை போடப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க பழைய நாட்கள் நினைவுகளை இந்த கட்டிடங்கள் கொண்டு வருகின்றன. 


வீடு 

beautiful-place-in-jaffna-in-srilanka
beautiful-place-in-jaffna-in-srilanka

உள்ளே சென்றால் முதலில் ஒரு கூரை வீட்டினை பார்க்க முடியும். சுண்ணாம்பு மற்றும் தென்னை ஓலை,பனை ஓலைகளை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. வீட்டினை சுற்றி அரிக்கன் லாம்பு என்று அழைக்கப்படும் நாம் சிறு வயதில் பயன்படுத்திய ஒருவகை விளக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. உள்ளே சென்று பார்த்தால் மண்ணால் செய்யப்படட பாத்திரங்கள் சில உள்ளன. 


துப்பாக்கி சுடும் இடம் 

beautiful-place-in-jaffna-in-srilanka
beautiful-place-in-jaffna-in-srilanka

இங்கு துப்பாக்கி சுட்டு பழகலாம் இதற்க்கு பணம் செலுத்த வேண்டி இருக்கும். 5 ரவுண்டு என்றால் இலங்கை பணம் 300 ரூபாயும், 10 ரவுண்ட் என்றால் 500 ரூபாயும் செலுத்த வேண்டி இருக்கும். 

எமது குறி பலூன்கள் அல்லது எலி , கோழி, காகம் போன்ற தகடுகளாக இருக்கலாம். சரியாக சுட்டால் எந்தவித பரிசும் கிடையாது. எமது பொழுது போக்குக்கும் எமது திறமையை வெளிக்காட்டவும் இங்கு சுட்டு பாக்கலாம். 


வில் வித்தை கழகம் 

beautiful-place-in-jaffna-in-srilanka
beautiful-place-in-jaffna-in-srilanka

இங்கு அம்பு எய்து பழகலாம். பாகுபலி போல் அம்பு எறிய இங்கு ஒரு சிறந்த Training எடுக்கலாம். இலங்கை பணம் 300 ரூபாய்க்கு 6 அம்புகள் தரப்படும். சரியான புள்ளியில் அம்பு எறியவேண்டும். இதற்கும் எந்தவித பரிசுகளும் தரமாட்டார்கள். இது எமது பொழுதுபோக்குக்காக மட்டுமே.

படகு சவாரி 

beautiful-place-in-jaffna-in-srilanka
beautiful-place-in-jaffna-in-srilanka

அருவிகளில் செலுத்தும் துடுப்பு போட்டு ஓட்டும் படகு இங்கு உள்ளது. இதற்கு 3 நபர்களுக்கு 400 ரூபாய் எடுக்கின்றார்கள். இதுபோல் துடுப்பு போட்டு ஓடும் படகு யாழ்ப்பாணத்தில் வேறு எங்கும் கிடையாது. சின்ன ஒரு குளத்தில் தான் படகு செலுத்த முடியும். படப்பிடிப்பு செய்பவர்களுக்கு ஒரு சிறந்த படம் எடுக்கக்கூடிய தளமாக உள்ளது.

இங்கு ஒரு சிறு சிற்றுண்டி சாலையும் உள்ளது. அங்கு கூழ் செய்தும் தருகின்றனர்.

இது இன்னும் முழுமையாக செய்து முடிக்கவில்லை. முழுமையாக முடிக்கும் போது சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஒரு சிறந்த இடமாக Neithal Beach City இருக்கும். இந்த தொகுப்பின் வீடியோ பார்வையிட கீழே கொடுத்துள்ளேன். மறக்காமல் அதனையும் பார்த்து எமது YouTube Channel க்கு உங்கள் ஆதரவை தரவும்.