Blogger Custom 404 Error Fix

How To Fix Blogger 404 Error in Tamil | Blogger URL Not Found 404 Error Problem Fix | Custom 404 Fix
Blogger 404 Error Fix

வணக்கம் 
பிளாக்கர் உருவாக்கி அதன் மூலம் பணம் உழைக்க நினைக்கும் அனைவரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை CUSTOM 404 ERROR ஆகும். இந்த பிரச்சனை ஏன் வருகின்றது என்று முதலில் பார்ப்போம். நீங்கள் ஒரு போஸ்ட் உருவாக்கி விட்டு பின்னர் அதனை டெலீட் செய்வதால் இந்த ப்ரோப்லம் வருகிறது. நீங்கள் உருவாக்கிய அந்த போஸ்ட் Google இல் Index ஆகிவிட்டால் அந்த போஸ்ட் Google இல் Rank ஆக ஆரம்பித்துவிடும். அந்த போஸ்ட் இனை பலர் கூகுள் மூலம் கிளிக் செய்து வந்து பார்ப்பார்கள். இவ்வாறு இருக்கையில் நீங்கள் அந்த குறிப்பிட்ட போஸ்ட் இனை அழிப்பதால் கூகுள் மூலம் கிளிக் பண்ணி வருபவர்களுக்கு காண்பிக்க போஸ்ட் எதுவுமிருக்காது. அப்போது அங்கே CUSTOM 404 ERROR வருகிறது. இது உங்கள் பிளாக்கர்க்கு SEO Rank இனை குறைத்துவிடும், மற்றும் இப்படியான ERROR இருக்கும் பொழுது உங்களால் உங்கள் பிளாக்கர் ஐ  Google AdSense க்கு விண்ணப்பிக்க முடியாமல் போகும் வாய்ப்பு அதிகம். இந்த CUSTOM 404 வராமல் தடுக்க இரண்டு வழிகள் உள்ளன. 


உங்களுக்கு தெரியும் இந்த போஸ்ட் நான் டெலீட் செய்தேன், அந்த போஸ்ட் கூகுள் இல் Index ஆகிவிட்டது என்று உங்களுக்கு தெரியும் என்றால் நான் கூறும் இந்த படிமுறையை செய்யவும். எந்த போஸ்ட்க்கு 404 வருகிறதோ அந்த URL க்கு பதிலாக வேற ஒரு Link க்கு Redirect செய்யமுடியும். இவ்வாறு செய்வதால் உங்களுக்கு வந்த அந்த 404 Error இல்லாமல் போகும். 
Blogger Setting க்கு செல்லவும். அதில் கீழே சென்று பார்க்கவும். அங்கே Errors and Redirect என்று இருக்கும். அதில் Custom Redirects என்று இருப்பதில் உங்களுக்கு 404 வந்த URL இனையும் எந்த Page க்கு Redirect ஆகவேண்டுமோ அந்த Page உடைய URL உம் கொடுக்கவேண்டும். இப்படி செய்வதற்கு உங்களுக்கு எந்த URL லில் 404 வந்தது என்று தெரிந்து இருக்கவேண்டும். 
Blogger Custom 404 Error Redirect html Coding
Blogger Custom 404 Error Redirect html Coding

அடுத்தது நான் கீழே கொடுக்கும் html coding இனை உங்கள் Blogger Setting இல் இருக்கும் Custom 404 என்ற இடத்தில் இதை Copy செய்து அங்கே Paste செய்யவேண்டும்.

Custom 404 Html Coding தரவிறக்க 35 வினாடிகள் காத்திருக்கவும். பின்னர் கீழே உள்ள Click Here என்பதை கிளிக் பண்ணவும்.
👇👇👇👇
You have to wait 35 seconds.

Download Timer
மேலே குறிப்பிட்ட html இனை போட்டதன் பின்னர் உங்கள் பிளாக்கர் இல் தவறான லிங்க் இனை குறிப்பிட்டு தேடி பார்க்கவும். அப்போது 404 Error வரும், 404 Error வந்து குறைந்தது 5 வினாடிகளில் Redirect ஆகி உங்கள் பிளாக்கர் உடைய Home Page க்கு செல்லும். இவ்வாறு செய்வதால் உங்களின் பிளாக்கர் இல் வரும் Custom 404 Error வினை தவிர்க்க முடியும்.

நான் கொடுத்த இந்த Coding சில Themes களுக்கு சரியான முறையில் வேலை செய்யாது. அவ்வாறு வேலை செய்யவில்லை என்றால் எனது யூடுப் பக்கத்தில் கமெண்ட் மூலம் தெரிவிக்கவும்.

இந்த Customs 404 Error க்குரிய முழு காணொளி எமது பக்கத்தில் உள்ளது அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவை எனின் அந்த காணொளியை பார்த்து முழுமையாக தெரிந்துகொள்ளவும்.
மிக்க நன்றி