What is Google My Business in Tamil 2021

What is Google My Business in Tamil 2021 | Google My Business Guide in Tamil | Google Map Explain
Google My Business in Tamil

Google My Business என்றால் என்ன ? அதன் மூலம் எமக்கு என்ன லாபம் என்று எல்லாம் நாங்கள் பார்க்கவுள்ளோம். நீங்கள் ஒரு வியாபாரம் நடத்துகிறீர்கள் என்றால் இது கட்டாயம் செய்யவேண்டியது ஒன்றாகும். உங்கள் வியாபாரத்தை அல்லது தொழிலை மிகவும் வேகமாகவும் ஒரு குறுகிய காலத்தில் வளர்ப்பதற்கும் இது மிகவும் உதவி புரிகிறது.

நீங்கள் ஒரு இடத்தில் உள்ளீர்கள். உங்களுக்கு தேவையான ஒரு பொருளையோ அல்லது அதற்கான ஒரு கடையோ உள்ளது. அதற்கு செல்லவேண்டும் என்றால் அனைவரும் Google Map மூலம் தான் பார்த்து அறிந்துகொள்வார்கள். அந்த Google Map இல் உங்கள் தொழிலை கொண்டுவருவதற்கு நீங்கள் கட்டாயம் Google My Business கணக்கு திறக்கவேண்டும்.

இவ்வாறு நீங்கள் ஒரு கணக்கு திறப்பதால் உங்களுக்கு உங்கள் தொழிலுக்கு என்று ஒரு தனி இடத்தை பதிந்துகொள்ளலாம் Google Map இல.

சரியான முறையில் கணக்கு திறப்பதற்கு உங்கள் தொழிலின் பெயரில் ஒரு புது இமெயில் உருவாக்கி வைப்பது நல்லம். அந்த இமெயில் மூலம் Google My Business என்ற கணக்கு திறக்கும் இடத்தில் ஓபன் பண்ணவும். சில Details கேட்பார்கள். உங்களின் தொழிலின் பெயர் , உங்கள் தொழிலின் வகை ,உங்கள் பெயர் ,உங்கள் தொழிலின் முகவரி போன்ற சில கேள்விகள் கேட்பார்கள். அவற்றுக்கு சரியான பதில் அளிக்கவேண்டும். 

சரியான பதில் அளித்த பிறகு நீங்கள் கட்டாயம் உங்கள் கணக்கை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு உங்களுக்கு ஒரு கடிதம் வரும். நீங்கள் கொடுத்த அந்த முகவரிக்கு ஒரு கடிதம் 14 நாட்களில் வரும். அந்த கடிதத்தில் உள்ள இலக்கங்களை நீங்கள் உங்கள் Google My Business கணக்கில் பதிய வேண்டும் . இவ்வாறு செய்தால் மட்டுமே அனைவரும் Google Map இல் தேடிப்பார்க்க கூடியவாறு முழுமையாக உங்கள் கணக்கு ஓபன் ஆகும் .

இதன் பின்னர் நீங்கள் உங்கள் தொழிலில் இருக்கும் புது புது Update களை செய்யவேண்டியது கட்டாயம். தொழிலின் நேரம், உங்கள் வியாபாரத்தின் புகைப்படம் போன்றவை பதிவிட முடியும்.

இலகுவாக எவ்வாறு உருவாக்குவது என்று நான் அனைத்து படிமுறைகளையும் 4 வீடியோகளில் போட்டுள்ளேன். அதற்கான வீடியோக்கு செல்வதற்கான லிங்க் கீழே தந்துள்ளேன் . முழுமையாக பார்த்து பயன்பெறவும்.
Google My Business Video Link 
👇👇👇