WhatsApp Updates 2021
வட்ஸ்அப்பில் வந்துள்ள  மூன்று புத்தம்புதிய  அட்டகாசமான விடயங்கள்

வட்ஸ்அப்பில் வந்துள்ள  மூன்று புத்தம்புதிய  அட்டகாசமான விடயங்கள் | WhatsApp Upcoming Update 2021
WhatsApp Updates 2021

மார்க் ஜுக்கர்பெர்க் கூறிய வட்ஸ்அப்பில் வந்துள்ள  மூன்று புத்தம்புதிய  அட்டகாசமான விடயங்கள் 

அனைவராலும் பயன்படுத்தப்படுகின்ற பிரபலமான சமூக வலைத்தளங்களில் பேஸ்புக்கும் ஒன்று. பேஸ்புக் நிறுவனம் தற்போது மெசெஞ்சர், வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றை சொந்தமாக்கி உள்ளது. 

அந்தவகையில் ஒரு காலத்தில் பலராலும் பயன்படுத்தப்பட்ட வைபர், ஐ.எம்.ஓ போன்றவற்றினை வட்ஸ்அப் ஒரேயடியாக பின்தள்ளி தனக்கென ஒரு தனி இடத்தை மக்கள் மத்தியில் நிலைநாட்டி உள்ளது. 

பேஸ்புக் நிறுவனம் தாம் வாங்கியதில் இருந்து பல விதமான புதிய புதிய விடயங்களை அவற்றில் பதிவேற்றி வருகின்றது. ஆரம்ப காலங்களில் குறைந்தளவு டேட்டா பயன்படுத்தி தரமான வீடியோ கோல் கதைப்பதற்காகவே பலராலும் வட்ஸ்அப் பயன்படுத்தப்பட்டது. ஏனெனில் மற்ற அப்ஸ் இனை விட இதில் தெளிவான ஓடியோ, வீடியோ கிடைக்கும். 

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள மார்க் ஜூக்கர்பெர்க் வட்ஸ்அப்பில் புதிய மூன்று விடயங்கள் வரவுள்ளதாக அறிவித்திருந்தார். 

கடந்த மாதத்தில் வட்ஸ்அப் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பல விடயங்கள் பற்றி கலந்துரையாடல் இடம்பெற்றது.  

குறித்த கூட்டத்தின்போது, "Multi device support" ​​, "view once" மற்றும் "Disappearing mode" எனும் மூன்று புத்தம்புதிய அம்சங்கள் கூடிய விரைவில் வட்ஸ்அப்பில் வரப்போகிறது என்பதை பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி அறிவித்திருந்தார்.
அது மட்டுமல்லாது அடுத்து வரும் சில வாரங்களில் வட்ஸ்அப் பீட்டா சோதனை, மல்ரி டிவைஸ் ஆதரவை ஆரம்பிக்கும் எனும் உறுதி மொழியும் வழங்கினார்.
அந்த கலந்துரையாடலில் அறிவித்திருந்தவாறு வட்ஸ்அப்பில் தற்போது வந்துள்ள அந்த அட்டகாசமான மூன்று விடயங்கள் என்ன என்ன என்று கீழே விரிவாக பார்ப்போம். 

வட்ஸ்அப்பில் வந்துள்ள மூன்று புதிய அட்டகாசமான அம்சங்கள் 

1) View once அம்சம் 


நீங்கள் ஒருவருக்கு புகைப்படங்களையோ வீடியோக்களையோ வட்ஸ்அப்பில் அனுப்புகிறீர்கள். ஒரு தேவைக்காக அனுப்ப நேரிட்டாலும், அப்புகைப்படமோ, வீடியோவோ அவருக்கு ஒருமுறைக்கு மேல் தேவைப்படாது எனும் பட்சத்தில் இவ் அம்சத்தினை பயன்படுத்தி அவருக்கு அனுப்பிய புகைப்படத்தை அல்லது வீடியோவினை ஒருமுறை பார்த்த பின்னர் மீள பார்க்க முடியாமல் செய்யலாம். ஒருமுறை யாதாயினும் ஒரு தேவைக்கு அனுப்பும்போது ஒருமுறை பார்த்த பின் பார்க்க முடியாது என்பது உங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று தான் கூற வேண்டும்.  ஒருமுறை மட்டும் காண்பிக்க என்ற அம்சம் இப்போதுள்ள அப்ஸ் களில் பலவற்றில் இல்லை என்பது உங்களுக்கும், எனக்கும் நன்றாக தெரியும். 

வட்ஸ்அப்பில் நீங்கள் ஒருவருக்கு அனுப்பும் மெசேஜ்ஜில்  "view once" எனும் விடயம் ஓன் செய்யப்படும்போது 
அதை பெறுபவர்கள் நீங்கள் அனுப்புகின்ற புகைப்படத்தை அல்லது வீடியோவை ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். புகைப்படம் அல்லது வீடியோவுடன் நீங்கள் ஏதாவது செய்தி அனுப்பும்போது அந்த மெசேஜ் இனை பார்த்தவுடன்,  உடனே தானாகவே அழிந்து விடும். 

எல்லா விடயத்திலும் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும் என்று கூறுவார்கள். அது போல வட்ஸ்அப்பிலும் இந்த விடயத்தில் உள்ள குறை என்ன என்று பார்த்தால் நீங்கள் ஒருமுறை மட்டும் காண்பிக்க என்ற அம்சத்துடன் ஒருவருக்கு வீடியோ அல்லது புகைப்பட மெசேஜ் அனுப்பினால் கூட,  அனுப்பும் மெசேஜினை பெறுபவர்கள் அந்த வீடியோ அல்லது புகைப்படத்தினை  ஸ்கிரீன் ஷொட் செய்ய அனுமதி வழங்கியுள்ளது என்பது வட்ஸ்அப் பயனர்களுக்கு பலத்த ஏமாற்றம் அளிக்கிறது. 

அத்துடன் வேறு ஏதும் வகையில்  சேமித்து வைத்துள்ளாரா என்பதையும் அறிய முடியாமல் உள்ளது. அது தொடர்பில் ஒரு உறுதி தன்மை இல்லாமல் காணப்படுகின்றது. 

வட்ஸ்அப்பினை சொந்தமாக்கி உள்ள பேஸ்புக் நிறுவனம் தனது பேஸ்புக் அப் பயனர்களுக்கு அவர்களின் பேஸ்புக் புரொஃபைல் போட்டோவினை பார்க்க மட்டுமே முடியும், சேமித்து வைத்து கொள்ளவோ அல்லது யாரும் ஸ்கிறீன் ஷொட் செய்வதையோ தடை செய்யும் வசதியை வழங்கியுள்ளது. 
எனவே வட்ஸ்அப்பிலும் இனி வரும் காலத்தில் குறித்த வசதி வரும் என நம்புவோம். 

ஒருமுறை மட்டும் காண்பிக்க என்ற அம்சம் வந்ததன் பின் வட்ஸ்அப் பயனர் தான் அனுப்பிய போட்டோ, வீடியோ தொடர்பில் பாதுகாப்பாக அனுப்பியது போல் உணர்கிறார். 

ஒருமுறை இவ்வம்சமானது 100% பயனரின் பாதுகாப்பினை மட்டுமே முதன்மை நோக்கமாக பார்த்து கொண்டு வரப்பட்டது என்று ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார். 

எனவே உங்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நீங்கள் அனுப்பும் புகைப்படம் அல்லது வீடியோ உடன் கூடிய மெசேஜ் இற்கு ஒருமுறை மட்டும் காண்பிக்க அம்சமூடாக அனுப்புங்கள். 
உங்களின் வட்ஸ்அப் அப்டேட் செய்யப்பட்டிருப்பின் புகைப்படம் அல்லது வீடியோவினை தெரிவு செய்து தகவலை டைப் செய்யும்போது உங்களின் வலது கைப்புறமாக 1 எனும் அடையாளம் தோன்றும். அதனை ஓன் செய்து விட்டால் சரி. 

2) Multi Device support 


வட்ஸ்அப்பில் இப்போதே மற்றைய அப்ஸ் இனை விட அதிக வித்தியாசமான விடயங்களை கொண்டுள்ளது. எனினும் பெரும்பாலும் அனைத்து அப்ஸ் இலும் காணப்படும் மிக பெரிய குறைபாடு மல்ரி டிவைஸ் சப்போர்ட் இல்லாதது தான். தற்போது உள்ள வித்தியாசமான அம்சங்கள், பயன்கள் பற்றி  கருத்தில் எடுத்து WABetaInfo, வட்ஸ்அப்பில் வர வேண்டும் என அனைவராலும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட மல்ரி டிவைஸ் சப்போர்ட் அதாவது பல் சாதனங்களின் ஆதரவு வழங்குதல் என்ற விடயம் தொடர்பாக நிறுவன தலைமை நிர்வாகிகளிடம் வினவினர். 

குறித்த கேள்விக்கு பதில் வழங்கிய அவர்கள், உங்களின் கையில் உள்ள  முதன்மை சாதனம் இன்டர்நெட்டுடன் தொடர்பில்லாத சமயத்தில், ​​"அனைத்து செய்திகளையும் எல்லா டிவைஸிலும் கொண்டு வருவது என்பது ஒரு தொழிநுட்பம் சார்ந்த பெரிய சவாலாக எமக்கு உள்ளது" என தலைமை அதிகாரிகளில் ஒருவர் கூறினார். 

மேலும் "எனினும், எமது நிறுவனம் இந்த பிரச்சனையை வெற்றிகரமாக தீர்த்துள்ளது, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு Multi device support வழங்கும்" என்றும் கூறினார்.

இந்த புதிய அம்சத்தின் மூலம், உங்களின் முதன்மை சாதனம் இணையத்துடன் தொடர்பு இன்றி இருப்பினும், பல்வேறுபட்ட  தளங்களில் நீங்கள் உங்களின் வட்ஸ்அப்பினை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

அது மட்டுமன்றி, இவ்வம்சம் ஐ பாட் ஆதரவை அறிமுகப்படுத்திக்கொள்ள வட்ஸ்அப்பினை அனுமதிக்கும் அதேவேளை, உங்களின் வட்ஸ்அப் கணக்கில் நான்கு டிவைஸினை  இணைக்க முடியும். உண்மையிலேயே இது ஒரு சூப்பரான விடயம் தான் அல்லவா. 

3) Disappearing mode அம்சம் 


முதலாவது அம்சமாக புகைப்படம் அல்லது வீடியோவினை ஒரு தடவை மட்டும் காண்பிக்கும் அம்சத்தை பற்றி பார்த்தோம். இப்போது Disappearing mode என்ற விடயத்தின் மூலம் பயனர்கள் ஒருவருக்கு  அனுப்பிய மெசேஜ் குறிப்பிட்ட நாட்களுக்குள் அழிந்து போகும் வகையில் அனுப்பலாம்.
இது கூட நல்ல ஒரு விடயம் என்று தோன்றுகிறது அல்லவா. 

வட்ஸ்அப் இந்த அம்சத்தினை அனைத்து வகை மெசேஜ்களிலும் பயன்படுத்தக்கூடியவாறு அனுமதி அளித்துள்ளது. 

இப்போது மெசேஜ் எல்லாம் ஆதாரமாய் ஒரு பிரச்சனைகளில் முன்வைப்பார்கள். அப்படி மாட்டி முழிப்பவர்கள் இனி தப்பித்து கொள்வார்கள். தவறுதலாக தேவையில்லாத விடயம் ஒன்றை பற்றி உரையாடுபவர்களோ அல்லது  தெரியாதவர்களுக்கோ மெசேஜ் அனுப்பும் பொழுது அந்த செய்திகளை ஒரு வாரத்திற்குள் அதாவது ஏழு நாட்களில் தானாக அழியும் அம்சத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வட்ஸ்அப் சோதனைக்கு வெளியிட்டது. 

இப்போது ஒருவர் அனுப்பும் மெசேஜ் ஒரு நாளில் அதாவது 24 மணி நேரத்திற்குள் தானாக மறையும் வண்ணம் புதிய அப்டேட்டினை  வெளியிட்டுள்ளது.  இதுவும் பயனர்கள் மத்தியி்ல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என கூறலாம். 

மேலே விரிவாக பார்க்கப்பட்ட அனைத்து அம்சங்களும் தற்போது வட்ஸ்அப்பில் வந்துள்ளன. உங்களுடைய வட்ஸ்அப்பினை நீங்கள் அப்டேட் செய்து வைத்திருந்தால் உங்களால் இப்போது இந்த புது அம்சங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும். அப்டேட் செய்யாதவர்கள் அப்டேட் செய்து இவற்றினை பயன்படுத்த முடியும். 
ஆகவே நீங்கள் அனைவரும் வட்ஸ்அப்பில் வந்துள்ள புதிய அம்சங்களை பயன்படுத்தி பாருங்கள். அவற்றின் குறை, நிறைகளை எங்களுக்கு தெரிவியுங்கள். 

வட்ஸ்அப்பில் இனி வர வேண்டும் என நீங்கள் அதிகமாக எதிர்பார்க்கின்ற அப்டேட்கள் என்ன என்ன என உங்களின் கிரியேட்டிவ் திறமையை பயன்படுத்தி கூறுங்கள்.