Best 6 Chrome Extensions to Use in 2022 Tamil Review | 6 Awesome Google Extension in Tamil 2022

Best 6 Chrome Extensions to Use in 2022 Tamil Review | 6 Awesome Google Extension in Tamil 2022
6 Awesome Google Extension in Tamil 2022

வணக்கம் நண்பர்களே

நாம் கணனியில் அன்றாடம் செய்யும் வேலைகளை மிகவும் எளிமையாக்குவதுக்கு Chrome Extensions பெரிதும் பங்கு வகிக்கிறது. இன்று நான் சில Extensions களும் அவற்றின் பயன்களும் அவை எவ்வாறு எம்முடைய வேலைகளை மிகவும் எளிமையாக்க உதவுகின்றது என்றும் சொல்லி தரவுள்ளேன். பல Extensions இருக்கின்றது அதில் சில Extensions கள் பற்றி இன்றும் மற்றவை பற்றி பின்னரும் தொடர்ந்து பார்ப்போம்.

இந்த Extensions களை உங்களின் PC / Laptop இல் நிறுவுவதற்கு நீங்கள் முதலில் கூகிள் தளத்துக்கு சென்று Chrome Extensions என்று தேடுதல் வேண்டும். அப்போது Extensions க்கு செல்வதற்கான லிங்க் கிடைக்கும் . இல்லை என்றால் Click Here என்றதை கிளிக்  நேரடியாக செல்ல முடியும்.

உள்ளே சென்ற பிறகு இடது பக்கத்தில் Search என்று இருக்கும் அதில் நீங்கள் பதிவு செய்யவேண்டிய எஸ்ட்டென்ஷன் இனை அதன் பெயர் போட்டு தேடவும். உங்களுக்கான எஸ்ட்டென்ஷன் கிடைத்தால்  ஓபன் செய்து அதில் Install என்று இருக்கும் பொத்தானை அழுத்துவதன்மூலம் அந்த எஸ்ட்டென்ஷனை உங்கள் கணனியில் பதிவுசெய்துகொள்ளமுடியும்.  

ஒவ்வொன்றாக பார்க்க செல்வதற்கு முன் கீழே இருக்கும் காணொளியினை பார்க்கவும். மற்றும் அனைத்தையும்  Download செய்வதற்கான லிங்க் ஒவ்வொன்றும் தனித்தனியாக உள்ளது ஆகவே பதிவினை படித்து முடித்ததன் பின்னர் சிறிது நேரம் காத்திருக்கவும். 35 வினாடிகளின் பின்னர் Install என்று வரும்.அதனை கிளிக் செய்வதன் மூலம் இலகுவாக தரவிறக்கலாம்.

முழுமையாக காணொளியினை பார்க்கவும்
👇👇👇

Checker Plus For Gmail

இந்த Extension மூலம்  உங்களின் ஈமெயில் க்கு வரும் Message கள் மற்றும் நீங்கள் அனுப்ப இருக்கும் அனைத்து Message களும் மிக விரைவில் அனுப்பலாம். காரணம் நீங்கள் வேறு ஒரு தளத்தில் வேலையாக இருப்பீர்கள் அப்போது ஈமெயில் அனுப்பவேண்டும் என்றால் அதுக்கு என்று ஒரு புதிய TAP ஓபன் செய்து அனுப்பவேணும் . ஆனால் இந்த எஸ்ட்டென்ஷன் மூலம் அவ்வாறு ஒரு புதிய Tap ஓபன் பண்ணி தான் அனுப்பனும் என்ற கட்டாயம் இல்லை. அதே தளத்தில் இருந்து உங்களுக்கு வந்த Inbox மற்றும் நீங்கள் அனுப்பவிரும்பும் ஈமெயில் களை அனுப்பியும் கொள்ள முடியும்.

Checker Plus For Gmail Extension இனை தரவிறக்க கீழே அதற்கான லிங்க் தந்துள்ளேன்.
👇👇👇

Scribe

இந்த Scribe Extension மூலம் நீங்கள் ஒரு நபருக்கு ஒரு விடயம் சொல்லித்தர உள்ளீர்கள். அதனை அந்த நபருக்கு Screen Short மூலம் தெளிவாக நீங்கள் செய்த படிமுறைகள் அனைத்தையும் அனுப்பி நீங்கள் கூற வந்த அனைத்தையும் தெளிவாக விளங்க படுத்த முடியும்.

இதில் எடுக்கும் Screen Short களை Image ஆகவோ அல்லது PDF ஆகவோ அனுப்பி கொள்ளமுடியும்.

Scribe Extension இனை தரவிறக்க கீழே அதற்க்கான லிங்க் தந்துள்ளேன். 
👇👇👇

Papier

இந்த Papier Extension மூலம் உங்கள் New Tap இனை ஒரு Notepad போன்று பயன்படுத்தலாம். குறுகிய Notes களை இலகுவாக Save செய்து உங்களுக்கு தேவை படும் நேரத்தில் இலகுவாக அதை பார்த்து அறிந்துகொள்ளவும் முடியும். New Tap இல் இந்த Notepad இருப்பதால் ஒவ்வொரு முறை நீங்கள் New Tap ஓபன் செய்யும் பொழுது நீங்கள் அதில் பதிந்த குறும் செய்தி நினைவு படுத்தி கொண்டு இருக்கும். எந்த விடயத்தையும் மறந்துவிடாமல் இருக்கலாம்.

Papier Extension இனை தரவிறக்க கீழே அதற்கான லிங்க் தந்துள்ளேன். 
👇👇👇

GoFullPage

இந்த GoFullPage Extension எதற்கு பயன்படுகின்றது என்றால் நீங்கள் ஒரு Wesite இல் ஒன்றை படித்து கொண்டு உள்ளீர்கள். ஆனால் அந்த வெப்சைட் இல் உள்ள அனைத்தும் ஒரே Page View இல் பார்க்க முடியாது. அவ்வாறு ஒரே Page View இல் பார்க்க வேண்டும் ஆனால் உங்களுக்கு இந்த GoFullPage Extension உதவி செய்யும். இதன் உதவி கொண்டு எந்த பெரிய கதையாக இருந்தாலும் அதை ஒரே Page இல் கொண்டுவரலாம். இதில் எடுக்கும் Image களை JPG ஆகவோ அல்லது PDF ஆகவோ எடுக்க முடியும்.

GoFullPage Extension இனை தரவிறக்க கீழே அதற்கான லிங்க் தந்துள்ளேன்.
👇👇👇

Print Friendly

இந்த Print Friendly Extension மூலம் எந்த வெப்சைட் இல் இருக்கும் எந்த பதிவாக இருந்தாலும் அதை Print எடுக்க கூடியதுபோல் அதில் உள்ள எழுத்துக்கள் மட்டும் copy பண்ணி வேறாக எடுக்க உதவும் Extension தான் Print Friendly. இதில் எடுக்கும் பதிவை PDF ஆகவும் பதிவு செய்து வைத்துக்கொள்ள முடியும்.
  
Print Friendly Extension இனை தரவிறக்க கீழே அதற்கான லிங்க் தந்துள்ளேன்.
👇👇👇

Google Translate

Google Translate Extension எதற்கு பயன்படுத்தப்படுவது என்று அனைவருக்கும் நன்கு தெரியும் என்று நினைக்கிறேன். தெரியாதவர்களுக்கா Google Translate மூலம் வேறு மொழிகளில் உள்ள Letter பதிவுகளை உங்களுக்கு தெரிந்த உங்கள் தாய் மொழியில் இலகுவாக படித்து தெரிந்துகொள்ள உதவும் ஒரு Extension ஆகும். இதுவும் நீங்கள் வேறு ஒரு tap இல் வேலை செய்யும் பொழுது தேவை என்றால் மேல் இருக்கும் Box இனை கிளிக்  செய்வதன் மூலம் இலகுவாக பயன்படுத்தி கொள்ளமுடியும்.

Google Translate Extension இனை தரவிறக்க கீழே அதற்கான லிங்க் தந்துள்ளேன்.
👇👇👇


நன்றி💬💬💬